அதிரடியாக கைது செய்த போலீசார் - உச்சகட்ட கொந்தளிப்பில் எடப்பாடி பழனிச்சாமி!
ADMK EPS Condemn KRISHNASWAMy arrest
மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த விருதுநகர் சென்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போலீசாரின் இந்த கைது நடவடிக்கைக்கு ஷியாம் கிருஷ்ணசாமி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும், கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, விருதுநகர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "மின்கட்டண உயர்வை திரும்பப் பெறவும்,மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டு அளவை எடுத்திடவும்,தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் வலியுறுத்தி, முறையாக அனுமதிபெற்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்க சென்ற அதன் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
இந்த பாசிச கொடுங்கோல் திமுக ஆட்சியின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அடக்குமுறைகளால் எல்லோரையும் அடக்கிவிடலாம் என நினைக்கும் இழிகுணத்தை இந்த அரசு கைவிட வேண்டும் இல்லையேல் இது மக்கள் போராட்டமாக மாறும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condemn KRISHNASWAMy arrest