உறுதுணையா இருக்க வேண்டிய நீங்களே முட்டுக்கட்டை போட்டா நியாயமா ஸ்டாலின்? கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!  - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை விடியா திமுக அரசு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது.

தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் ஏற்றும் முக ஸ்டாலினின் திமுக அரசு, உடனடியாக முத்திரைத் தாள் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK Govt MK Stalin for Revenue Hike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->