அயோக்கியர்களின் அராஜகத்தை அவதாரமெடுத்து அழிப்பது  குற்றமில்லை - கி.வீரமணிக்கு பதிலடி கொடுத்த பாஜக! - Seithipunal
Seithipunal


திராவிட கழக தலைவர் கி.வீரமணி தீபாவளி பண்டிகையை விமர்சித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,

"ஆரியர்களின் யாகத்தை – பண்பாட்டை – படையெடுப்பைத் தடுத்தது குற்றமாம்!
அதற்கு வஞ்சகமாக கொலை நாளாம்!
அறிவுள்ளோர், உணர்வுள்ளோர் ‘தீபஒளி’ என்று அழைக்கலாமா? இதைக் கொண்டாடலாமா?
சிந்திக்கும் மனிதர்களாக மாறுங்கள்"என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அயோக்கியர்களின் அராஜகத்தை - பண்பாட்டு சிதைவினை அவதாரமெடுத்து அழித்தது/அழிப்பது  குற்றமில்லை. தீய சக்திகளை அழித்த, அழிக்கும் நாளை கொண்டாடுவோர் நெஞ்சத்தில் வஞ்சகமில்லை. அறிவற்றோர், உணர்ச்சியற்றோர், நல்ல சிந்தனை இல்லாத தீய சக்திகள் தீபாவளியை கொண்டாடத் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கி.வீரமணி கூறிய, "தேவன் – தேவி இருவருக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரன், ராட்சசன், அரக்கனாக முடியும்? என்று கேள்விக்கு பதில் அளித்துள்ள நாராயணன் திருப்பதி, "நல்லவர்கள், அறிவாளிகள் பிறந்த தமிழ்நாட்டில் கி.வீரமணி போன்றவர்கள் எப்படி பிறந்திருக்க முடியும்?" என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Thirupathy Condemn to DK K Veeramani


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->