ஜாமினில் வரும் திமுகவினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தியாகி பட்டம் வழங்குகிறார் - எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


திமுகவினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தியாகி பட்டம் வழங்குவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சட்டவிரோத செயல்களில் கைதாகி ஜாமினில் வரும் திமுகவினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தியாகி பட்டம் வழங்குகிறார்.

துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் சமூக விரோத சக்திகளும், ஆளும் தரப்பும் பிரிக்க முடியாத அளவு ஒட்டி உறவாடுகின்றனர். 

போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியதற்கு காரணகர்த்தாக்கள் யார்? போதை பொருள் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு கடத்தும் போதைப் பொருட்களின் ஆணிவேரை கண்டறிய வேண்டும். திமுக அரசு பொதுவெளியில் மத்திய அரசை எதிர்ப்பது போல் எதிர்த்துவிட்டு, திரை மறைவில் ஆதரவு கொடுத்து இரட்டை வேடம் போடுகிறது"  என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK MK Stalin Senthilbalaji


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->