நடிகர் விஜய்-காக வரிந்துகட்டி வந்த எடப்பாடி பழனிச்சாமி! பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் மாநாட்டிற்கு திமுக அரசு அனுமதி கொடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது. 

அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஏன் காவல்துறையினருக்கே இந்த திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அந்த அளவுக்கு ஒரு திறமையற்ற முதலமைச்சராக மு க ஸ்டாலின் இருந்து வருகிறார். 

நாட்டில் யார் அரசியல் கட்சி தொடங்குவதற்கும் ஜனநாயக உரிமை உள்ளது. மாநாடு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டாலும் அனுமதி கொடுப்பது மரபு. 

எங்களுடைய ஆட்சி காலத்தில் கூட எல்லா கட்சிகளுக்கும் மாநாடு நடத்த அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால் நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு திமுக அரசு அனுமதி கொடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. 

நடிகர் விஜயின் கட்சியை கண்டு திமுக பயப்படுகிறதோ, இல்லையோ, யார் இந்த ஜனநாயக நாட்டில், எந்த கட்சி மாநாடு நடத்த அனுமதி கேட்டாலும் கொடுப்பதுதான் முறை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK MKSTalin for TVK Maanadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->