விசாரணை என்ற பெயரில் போலீசார் கொடூர தாக்குதல் - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்: கொலை வழக்கில் கைதானவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் கொடூரத் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் எவரையும் கைது செய்து முறையாக விசாரித்து சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.

குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்குவதும், தங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்வது போன்ற சூழ்நிலைகள் தற்போதைய விடியா திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to TN Police


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->