அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எஸ்பிவேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் 11 பேர் இணைந்து டெண்டர் முறைகேடு புரிந்ததாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

கடந்த 10 நாட்களாக அறப்போர் இயக்கம் தமிழக அரசியும், லஞ்ச ஒழிப்பு துறையையும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படவே இல்லை. அதை கேள்வி கேட்க அரசியல் கட்சிகளும் இல்லை. அந்த அளவிற்கு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து  பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் விமர்சித்து இருந்தது.

மேலும், வருடம் 90 கோடி செலவில் இயங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, ஒரு வருடத்தில் சென்னையில் 4 FIRகள் மட்டுமே பதிந்து, அதுவும் கடந்த 3 மாதங்களாக எந்த ஒரு FIRம் பதியாமல் தூங்குவதை நினைவுபடுத்தி அவர்களை தட்டி எழுப்பும் விதமாக கோரிக்கை மனுவும், காபி பொடியும் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு மேலும் தூக்கம் கலையவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் அறப்போர் தயார் என்று தெரிவித்திருந்தது குடிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex Minister SP Velumani Case File


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->