அதிமுக மாவட்ட செயலாளர்களை கைது செய்ய கூடாது., சற்றுமுன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு, இபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி.!
admk head office violence case chennai hc order
கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதே நேரம், அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில், 2 தனியார் பேருந்துகள், பள்ளி வாகனங்கள், கார், பைக்குகள் சேதமடைந்தன. கட்சித் தொண்டர்கள் என்று 47 பேர் காயமடைந்தனர்.
இந்த மோதல் சம்பவத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது 7 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உட்பட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், காவல்துறை பதிலளிக்கும்வரை, அதிமுக மாவட்ட செயலாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்ய கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
admk head office violence case chennai hc order