#BigBreaking || திட்டமிட்டபடி நடைபெறுமா அதிமுக பொதுக்குழு கூட்டம்... வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என்றும், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள சென்னை வானகரம் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்ட கேபி முனுசாமி, சி வி சண்முகம், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், உதயகுமார், தங்கமணி, எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது,

"வருகின்ற 23ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு கூட்டம் கூட வேண்டுமென்பது கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கழகத் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனையின் பேரில், பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவுள்ளது.

அந்த கூட்டத்திற்கு வருகை தர வேண்டி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு முறையாக கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதத்தை பெற்றுக்கொண்டு, அதற்கான அத்தாட்சியும் வந்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு மகிழ்ச்சியுடன் உறுதியாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk meet eps side announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->