#BREAKING || இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது அந்த அறிவிப்பு : எடப்பாடி தலைமையில் ஒன்று கூடிய எம்எல்ஏ.,க்கள்.! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார்.

தற்போது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆக உள்ளது. அதில், ஓபிஎஸ் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களான ஓபிஎஸ், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எதிரணியாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களை தவிர 63 எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓபிஎஸ்-யை எதிர்க்கட்சி துணை தலைவர் பதிவில் இருந்து நீக்குவதற்கான முடிவும் இதில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla meet now july


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->