ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக முதன் முதலில் முழக்கமிட்ட "மாவீரர் பூலித்தேவன்" அவர்களின் 307-வது பிறந்த தினத்தையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு 01-09-2022 (வியாழக்கிழமை) அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், "ஆங்கிலேயரின் அடிமைத்தளையில் காலம் காலமாக சிக்குண்ட அன்னை பாரதம் தற்போது உரிமை பெற்ற நாடாக , சுதந்திரம் பெற்ற நாடாக விளங்குகிறது. இச்சுதந்திரத்தைப் பெற இந்தியா முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும் பாடுபட்டனர்.
இதில் முதன்மையானவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள் தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி, தன்னிகரற்ற தலைவரரக, தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள். நெற்கட்டான்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு செங்கோலோச்சி, ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரர் பூலித்தேவன் அவர்கள், இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் "வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீரமுழக்கமிட்டவர்.
ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய பெருமை மாவீரர் பூலித்தேவன் அவர்களையே சாரும். "வரிக்கு பதிலாக நெல்லாவது கொடு” என்று ஆங்கிலேயர்கள் கேட்டபோது, “வரி என்று நீ கேட்டால் ஒரு மணி நெல்கூட தர முடியாது” என்று தீரமாக, தீர்க்கமாக, திடமாக, உறுதியாக மறுத்தவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள்.
"ஒரு நெல் மணிகூட வரியாகக் கட்ட முடியாது” என்று சொன்னதால் அந்தப் பகுதிக்கே “நெற்கட்டான்செவல்" என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களின் வருகையால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து நிலவிய நேரத்தில், அனைவரையும் ஒன்றுகூட்டி ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள். சிறு வயதிலிருந்தே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் கொண்ட மாவீரர் பூலித்தேவன் அவர்கள், போர்ப் பயிற்சி, குதிரை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, அம்பு எய்தல் உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றதோடு, சன்மார்க்க நெறிகளையும் நன்கு கற்றறிந்தார்.
தமிழ் இலக்கண, இலக்கியங்களை படித்து கவிதை எழுதும் திறமையையும் பெற்றிருந்தவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள் பாளையத்திலிருந்து பெறப்படும் வருமானத்தை மக்களுக்காகவும், நிர்வாகத்திற்காகவும், கோயில் திருப்பணிகளுக்காகவும் செலவு செய்து மக்களிடம் மிகுந்த நன்மதிப்பை பெற்றிருந்தவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள். இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கு உரியவரும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான பல போர்களில் வெற்றி வாகை சூடி, இறுதியாக தாய் நாட்டிற்காக தன் உயிரை அர்ப்பணித்தவருமான மாவீரர் பூலித்தேவன் அவர்களின் 307 - வது பிறந்த நாளான 01-09-2022 ( வியாழக் கிழமை ) அன்று காலை 11-00 மணிக்கு தென்காசி வடக்கு மாவட்டம் , வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெற்கட்டும்செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாவீரர் பூலித்தேவன் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓபிஎஸ்-யை தொடர்ந்து மாறிஉயத்தை செலுத்துபவர்கள் பெரிய லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், "கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம், M.L.A.,
முன்னாள் அமைச்சர் திரு . கு.ப. கிருஷ்ணன்,
கழக அமைப்புச் செயலாளரும், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், கழக செய்தித் தொடர்பாளருமான திரு. J.C.D : பிரபாகர், Ex . M.L.A.,
கழக அமைப்புச் செயலாளரும், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினருமான திரு. P.H. மனோஜ் பாண்டியன்,M.L.A.,
திரு. ஆர். தர்மர்,M.P.,
திரு. P. அய்யப்பன், M.L.A.,
கழக வழிகாட்டு குழு உறுப்பினர் திரு. R. கோபாலகிருஷ்ணன், Ex. M.P.,
திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. வெல்லமண்டி N. நடராஜன்,
பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R.T. ராமச்சந்திரன், Ex.M.L.A.,
தேனி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.P.M. சையதுகான், Ex. M.P.,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு . S.A. அசோகன்,
தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு . M.G.M. சுப்பிரமணியம், Ex . M.L.A.,
மாநில எம்.ஜி.ஆர் . இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு . A. மனோகரன் Ex . M.L.A.,
மாநில எம்.ஜி.ஆர் . இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு . A. சுப்புரத்தினம், Ex . M.L.A.,
திரு. E.A. இரத்தினசபாபதி , Ex . M.L.A.,
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக வழக்கறிஞர் பிரிவு தலைவர் திரு. N. சிவலிங்கமுத்து,
திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் . மன்ற துணைச் செயலாளர் திரு. பாளை P. தருமலிங்கம், Ex . M.L.A.,
தென்காசி தெற்கு மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த திரு. V.K. கணபதி,
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு . R. இராமகிருஷ்ணன் என்கிற மூர்த்தி பாண்டியன்,
மேலூர் நகரக் கழகச் செயலாளர் திரு . S.A. பாஸ்கரன்,
மதுரை மேற்கு ( தெற்கு ) ஒன்றியக் கழகச் செயலாளர் திரு . K. முருகேசன் ,
மாநில இளைஞர் , இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் திரு . G.R. ராமமூர்த்தி ,
விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தைச் சேர்ந்த திரு . ஜெ . பாலகங்காதரன், Ex . M.L.A. ,
விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு . அ . தெய்வம்,
விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் திரு . S.S. கதிரவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துக் கழக நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிவிப்பில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
admk ops announce for poolidevan hbd