BigBreaking | அதிமுகவில் திடீர் திருப்பம்., ஒன்றினையும் ஓபிஎஸ்-இபிஎஸ்.! வெளியான பரபரப்பு தகவல்.!
admk ops call to eps for compromise
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நலனுக்காக ஒன்றிணை வருமாறு, எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் அழைப்பு விடுக்க உள்ளதாக பரபரப்பு தகவல் சற்று முன்பு வெளியாகி உள்ளது.
அதிமுக என்ற பேரியக்கத்தை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைக்க ஓபன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அதிமுகவில் தற்காலிக இடைக்கால பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்றும், ஜூன் 23 க்கு முன்னதாக அதிமுக எப்படி இருந்ததோ அதே நிலைமை தொடரும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பு முறையாக கடிதம் அனுப்பி கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு கூட்டுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும், நான் ஒரு ஆணையரை நியமிப்பேன் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் தெரிவிக்கையில், அதிமுக என்ற கட்சியை தனி ஒருவர் சர்வாதிகாரமாக கைப்பற்ற முடியாது என்று தெரிவு தெரிந்தார்.
இந்நிலையில், சற்று முன்பு ஒரு பாரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வெளியான தகவலின் படி, ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அதிமுக நலனுக்காக எடப்பாடி பழனிசாமி பழனிசாமியை மீண்டும் கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
அதிமுகவின் நல்லனுக்காகவும், கட்சியை வலுப்படுத்தும் வகையிலும் எடப்பாடி பழனிசாமியை பேச்சுவார்த்தை அழைக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
English Summary
admk ops call to eps for compromise