அதிமுக முன்னாள் எம்எல்ஏ அதிரடியாக கைது! ஓபிஎஸ்-இபிஎஸ் விவகாரத்தில் முதல் கைது!
ADMK OPS vs EPS Issue Sivakasi Ex MLA arrested
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டமான சிவகாசியில் இந்தூர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகாசி-விருதுநகர் சாலை வழியாக எடப்பாடி பழனிசாமி செல்ல இருந்தார்.
இது குறித்து தகவலறிந்த அறிந்த ஓபிஎஸ் ஆதரவாளரும், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ.வும் பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.எ
அதன்படி. சாலையோரம் திரண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். இது குறித்து அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற வழக்கில் முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.
English Summary
ADMK OPS vs EPS Issue Sivakasi Ex MLA arrested