பால்டாயில் குடிச்ச குடும்பத்திற்கு கால் கழுவி விடும் பரம்பரை கொத்தடிமைகளுக்கு அறிவு இருக்கா? அதிமுக தரப்பில் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா குறித்துப் பேச அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு தகுதியில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசுகையில், "தங்களுக்கு கூடும் கூட்டத்தை பார்த்தவுடன் கட்சி தொடங்கி, முதலமைச்சராகி விடலாம் என அரசியலுக்கு வரும் நடிகர்களே, அதெல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு அது போய்விட்டது. 

அப்படி வந்தாலும் அரசியலில் அவர்களால் வெற்றிபெற முடியாது. காரணம் நடிகர்களுக்கு அறிவு இருக்காது. அவர்களால் ஆட்சி நடத்த முடியாது" என்று தா.மோ அன்பரசன் தெரிவித்தார். மேலும் எம்ஜிஆர் உடன் ஜெயலலிதாவை தவறாக இணைத்து ஒரு வார்த்தையை பயன்படுத்தி தா.மோ அன்பரசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  

இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா குறித்துப் பேச அமைச்சர் தா மோ அன்பரசனுக்கு தகுதியில்லை. மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம். 

உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த நாக்கூசும் வகையில் அமைச்சர் பேசி உள்ளார். உதயநிதியை துணை முதல் முதலமைச்சராக ஆக்குவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோல் அதிமுக செய்தி அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில், நடித்த பின் பால்டாயில் குடிச்சா அறிவு வளருமா தா.மோ அன்பரசன்? இல்லை பால்டாயில் குடிச்ச குடும்பத்திற்கு கால் கழுவி விடும் பரம்பரை கொத்தடிமைகளுக்கு அறிவு இருக்கா? என்று, அமைச்சர் உதயநிதி நடிகைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதேபோல் அதிமுக நிர்வாகி காயத்திரி ரகுராம் விடுத்துள்ள கண்டன செய்தியில், "யார் யாரை வைத்திருக்கிறார்கள் என்பதை திமுக தங்கள் வம்சத்தை சுத்தம் செய்ய வேண்டும். 

இந்த நபர் துறவியைப் போல பேசுகிறார், பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஆண், பெண்களை துஷ்பிரயோகம் செய்வதில் அனுபவம் வாய்ந்தவர். திராவிட சித்தாந்தம் பேச திமுகவுக்கு அருகதை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Side Condemn to DMK Anbarasan MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->