#BigBreaking || திடீர் திருப்பம் - அதிமுகவின் அஸ்திவாரத்துக்கே ஆப்பு.? இரட்டை இலை - ஜேஜே கட்சியின் நிறுவனர் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.! - Seithipunal
Seithipunal


உட்கட்சிப் பிரச்சனைகள் சிக்கி உள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அமர்வு விசாரணை செய்ய உள்ளது.

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும், ஜேஜே கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். 

கடந்த ஜூன் 28ஆம் தேதி இரட்டை இலை சின்னத்தை முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அது குறித்து எந்த பதில் மனுவும் வரவில்லை என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. 

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபடுத்துள்ள நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அதற்காகவே நடக்க உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை, நடத்த விடாமல் தடுப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு செய்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு உண்டான ஒரு வழக்கு நாளை விசாரணைக்கு வர இருப்பது, அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK TWIN LEAF ISSUE JJ PARTY OPS EPS ISSUE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->