தமிழகத்தின் முன்னாள் எம்பி காலமானார்.. சோகத்தில் அரசியல் கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மக்களவைத் தொகுதியில் மூன்று முறை எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.ஜி.எஸ் ராம்பாபு. இவரது தந்தை ஏ.ஜி.சுப்புராமன் இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஏ.ஜி.எஸ் ராம்பாபு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். ஏ.ஜி.எஸ் ராம்பாபு காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் 1989 முதல் 91 மற்றும் 1991 முதல் 96 வரை எம்பியாக இருந்துள்ளார். 

தந்தையைப் போலவே காங்கிரஸ்காரராக இருந்த ராம் பாபு, ஜி கே மூப்பனார் மீது கொண்ட பற்றால் தமாகாவில் இணைந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 1996 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக எம்பியாக வெற்றி பெற்றார். ஜி கே வாசனின் தீவிர ஆதரவாளரான இவர், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்தார். 

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராம் பாபுவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் மதுரை மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ags rambubu passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->