150 நாள் வேலைக்கு ஸ்டாலின் பிரதமராகனும்! மரபை மீறினாரா அப்பாவு? சாட்டைச் சுழற்றும் அதிமுக! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி அமைத்துள்ளது. பல மாநில கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டணி அமைத்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என ஒருமானதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமைக்கான கூட்டணி பாஜக இடம் பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் மு.க ஸ்டாலின் தான் என திமுக தரப்பினர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். 

சமூக வலைதளங்களில் மட்டுமே இந்த கருத்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்கள் மத்தியிலும் பிரதமர் வேட்பாளர் மு.க ஸ்டாலின் தான் என திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளே தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு "150 நாள் வேலைக்கு தர வேண்டும் என்றால் 100 நாள் வேலைக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும். மன்மோகன் சிங், கருணாநிதி இருந்தது போல நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வேண்டிய ஆள் அல்லது இவரே பிரதமரானால் தான் 150 நாள் வேலை நடைமுறைக்கு வரும். 

அதை நாங்கள் மறக்கவில்லை, அடுத்த வரவுள்ள தேர்தல் உங்கள் கையில் தான் உள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் சொல்லும் ஆட்களுக்கு நீங்கள் ஓட்டு போடுவீர்கள் என எனக்கு தெரியும். நன்றி உள்ள மக்கள் அவ்வாறு செய்வீர்கள் என நம்புகிறேன்" என பொதுமக்கள் மத்தியில் பேசி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பேசிய வீடியோவை ராதாபுரம் தொகுதி அதிமுக முன்னணி எம்எல்ஏவும் வழக்கறிஞருமான தம்பிதுரை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு "நூறு நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தரவில்லை! எனவே ஸ்டாலின் பிரதமராக வர ஓட்டு போடுங்க! மறவை மீறி திமுகவுக்கு ஓட்டு கேட்ட சபாநாயகர் அப்பாவு! சட்டப்பேரவையில் இவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார்? நடுநிலைத் தவறிய அப்பாவு எப்படி சபாநாயகராக தொடர முடியும்?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK accuses Appavu break speaker tradition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->