பி.டி.ஆரின் ரூ.30,000 கோடி ஆடியோ விவகாரம்.!! அதிமுக சார்பில் மீண்டும் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேர்த்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பதாக பேசி ஆடியோ சமூக வலைதளங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு முறை விளக்கம் அளித்து இருந்தார். இருப்பினும் தமிழக அமைச்சரவையில் அதிரடியாக இலாகாக்கள் மாற்றப்பட்டன. தமிழ்நாடு நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்த அமைச்சரவை மாற்றம் முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஒரு திறமையான நிதி அமைச்சரை தமிழக அரசு மாற்றி உள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டு இருந்தன.

இந்த நிலையில் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறைக்கு அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் கடிதம் மூலம் புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதியமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மேல் நடவடிக்கை மற்றும் தொடர் நடவடிக்கைக்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழக்கறிஞர் பாபு முருகவேல் மீண்டும் புகார் அளித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில் பதிவான குரல் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுடையது இல்லை எனும் பட்சத்தில், தமிழ்நாடு அமைச்சரின் குரல் பதிவை பதிவு செய்து குற்றம் சுமத்தியிருப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும்.

மேலும் உரிய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என மேலும் ஒரு புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அமலாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில் தற்பொழுது பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தை அதிமுக மீண்டும் கையில் எடுத்திருப்பது திமுகவினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK again complained appropriate action taken regarding PTR audio leaks


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->