இது தான் கள்ள கூட்டணி.. தோலுரித்த அதிமுக தரப்பு.. கொந்தளிக்கும் இன்ப துரை..!! - Seithipunal
Seithipunal


கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக தரப்பு புகார் அளித்துள்ளது. சென்னை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அண்ணாமலையின் வேட்பு மனு இயற்றப்பட்டது குறித்து அதிமுக தரப்பு புகார் அளித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வழக்கறிஞருமான இன்பதுரை கூறிகையில் "ஒரு வேட்பாளர் தலைவர் செய்தால் அந்த வேட்பு மனுவ மாற்றி தர வே டு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை அனுமதி அளிக்க முடியும். 

ஆனால் பரிசீலனின் நாளில் அண்ணாமலைக்கு தேர்தல் ஆணையர் அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். கரூர் மற்றும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளை மாற்றக் கோரிக்கை வைத்துள்ளோம். நீலகிரியில் ஒருதலைபட்சமாக செயல்படும் மாவட்ட தேர்தல் அதிகாரியையும் மாற்ற வேண்டும். நீலகிரி டிஆர்ஓ கீர்த்தி பிரியதர்ஷினி 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை இடமாற்றம் செய்யப்படவில்லை. 

தேர்தல் தேதி அறிவித்தவுடன் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் இன்று வரை முதல்வர் மற்றும் அமைச்சரின் பேச்சுக்களையும் படங்களையும் வாட்சப் மூலம் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்கள். 

இது தொடர்பாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம். அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தர்மபுரியில் பணம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் எங்கள் தரப்புக்கு தேர்தல் விளம்பரங்களுக்கு இன்னும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. போதிய அதிகாரிகள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் அதை வேகப்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். 

கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்த அண்ணாமலை அதில் தவறு செய்துள்ளார் என்று கூறி அதிமுக புகார் அளித்துள்ளது. ஆனால் திமுக ஏன் இது குறித்து பேசாமல் மௌனமாக இருக்கிறது? இப்போது யார் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார்கள் என தெரிகிறதா? என இன்பதுரை கேள்வி எழுப்ப உள்ளார் ஆவேசமாக.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK alleged DMK BJP illegal alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->