#BigBreaking :: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது வேட்பாளரை இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 27/02/2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிற கழக உடன்பிறப்புகள் விண்ணப்பிக்கலாம்.

அதிமுக தலைமைக் கழகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 23/01/2023 திங்கட்கிழமை முதல் 26/01/2023 வியாழக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டண தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வேட்பாளர் வரும் ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK announced Petition to contest for Erode East byelection


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->