அரசியல் திருப்புமுனை..விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதது அதிமுக!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த புகழேந்தி சமீபத்தில் உயிர் இழந்ததால், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களை முன்னிட்டு திமுக பாமக நாதாக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்த இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என்ற சந்தேகம் இது உள்ளதாக கூறி அதிமுக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை தேர்தலில் திமுக பல அரசங்களை செய்துதான் வெற்றி பெற்றிருக்கிறது எனவும் அதேபோல விக்கிரவாண்டி இடது சுதந்திரமாக நடக்காது என்று அவர் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புரட்சி கணித்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK boycotts Vikravandi assembly by election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->