#BigBreaking | வெளியேறினார் அதிமுக வேட்பாளர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் தொடர்ந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், நான்காவது இடத்தில் தேமுதிக வேட்பாளரும் உள்ளனர்.

12 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 39 ஆயிரத்து 759 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 13 ஆயிரத்து 543 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2126 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் 1031 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், தற்போது ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

இது கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களை காட்டிலும் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் ஆகும். இதற்கிடையே ஈரோடு இடை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறியுள்ளார். 

மேலும் "பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது" என்று முழுங்கியவரே அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறியுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Candidate Upset erode by election vote counting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->