சபாநாயகர் மீதான அதிமுக வழக்கு : சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...இதோ முழு விவரம்! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் திமுகவிற்கு வர தயாராக இருந்தநர். ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தது குறித்து, சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பாவு தரப்பு வழக்கறிஞர், சம்மன் தங்களுக்கு வரவில்லை என்றும், வந்திருந்தால் கண்டிப்பாக அப்பாவு ஆஜராகி இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், நீதிமன்றம் கூறும் தேதியில் அப்பாவு ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும்13-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததோடு, இதே தேதியில் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். இதன்படி, அப்பாவு வரும் 13-ம் தேதி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk case against speaker special court action order here is the full details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->