கஞ்சா விற்ற காட்டு ராஜா அதிமுகவில் இல்லை! பொய் செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு அதிமுக கடும் கண்டனம்!
AIADMK Condemn to Fake news DMK
திருவண்ணாமலையில் கஞ்சா விற்றதாக காட்டு ராஜா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், "அதிமுக பிரமுகர்" என்று சன் நியூஸ் செய்தி தொலைக்காட்சி பொய் செய்தி வெளியிட்டுள்ளதாக அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அந்த செய்திக்குறிப்பில், "கைது செய்யப்பட்டுள்ள நபர் அஇஅதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.
திமுகவைப் போன்று அயலக அணி மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலோ, அமைச்சரே தன் படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாகவோ இருந்திருந்தால் "அதிமுக பிரமுகர்" என செய்தி வெளியிட்டு இருக்கலாம்.
ஆனால், ஒரு நிகழ்ச்சியில் கூட்டத்தோடு கூட்டமாக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுவாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து ஆளும் விடியா திமுக சார்பான அரசியல் நோக்கத்துடன் அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள sunnewstamil, இனியும் இத்தகைய அவதூறுகளைத் தொடருமாயின், அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK Condemn to Fake news DMK