அதிமுக ஆலோசனை கூட்டம் இதற்குத்தானா.!! உண்மையை போட்டு உடைத்த ஜெயக்குமார்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி வரவுள்ள அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணை மற்றும் ஓபிஎஸ் தரப்பை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பான ஆலோசனையும் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம்.

இந்த கூட்டத்தில் கிளைச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும் "ஓபிஎஸ் நடத்தியது மாவட்ட செயலாளர்கள் கூட்டமே அல்ல. அவர் நியமனம் செய்த நிர்வாகிகள் அதிமுகவினரே கிடையாது. உண்மையான அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK consultative meeting regarding booth committee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->