துரைமுருகனின் சர்ச்சை வீடியோ.. "இதுக்கு பெயர் என்ன தொழில் தெரியுமா..?" சி.டி.ஆர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன் "செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் மாதம் கொடுக்கப் போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக் கொள்ளலாம். உங்கள் கணவர் சம்பாதிப்பது அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்துடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்.

உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார்கள் என்றால், வேலூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால் அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காத.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்.

நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு. அதுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம்" என சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அமைச்சரின் இத்தகைய பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பிரமுகர் சி.ஆர்.டி நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் "ஆயிரம் ரூபாய் கொடுத்து பசங்களோட ஊர் சுத்துங்க-னு சொல்றதுக்கு பெயர் என்ன தொழில் தெரியுமா?

ஏழை மாணவிகள் படிப்பிற்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியுமா?" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோவையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk CTR Nirmal Kumar criticizes Duraimurugan speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->