ஓபிஎஸ்.,க்கு அடுத்த நெருக்கடி.. இந்திய தேர்தல் ஆணையத்தை நாட அதிமுக முடிவு..!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியானதில் இருந்து எடப்பாடி தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வெளியானதில் இருந்து தமிழக முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக அடுத்த கட்ட நகர்வுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தங்களால் ஏற்க முடியவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் அதிமுக பொது குழு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியாகி உள்ளதால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலை சமர்ப்பித்து அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு வலியுறுத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் இன்று இந்திய தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்றே தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK decision to approach Election Commission of India


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->