அடுத்த கட்டத்துக்கு செல்லும் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான முக்கிய அறிவிப்பு!
AIADMK EPS Lok Sabha Election result meet july
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் இரண்டாம் கட்டம் : 24.7.2024 முதல் 5.8.2024 வரை கலந்தாலோசித்தல்.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், முதற்கட்டமாக 10.7.2024 முதல் 19.7.2024 வரை நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 24.7.2024 முதல் 5.8.2024 வரை, ஏனைய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான, கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.
அதன் விவரம் பின்வருமாறு:
English Summary
AIADMK EPS Lok Sabha Election result meet july