அடுத்தடுத்த சந்திப்புகள்! அதிமுகவிற்கு 2,3 இடங்கள் தானா? தனித்து போட்டியா?! இது வேறலெவல் டிவிஸ்டா இருக்கே! - Seithipunal
Seithipunal


இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இறுதி நாள் என்பதால், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பெரும்பாலான எம்பிக்களும் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவை, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை சந்தித்து உரையாடி உள்ளார்.

சந்திப்பு குறித்து முதல் கட்டமாக வெளியான தகவலின் படி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றுதான் தெரியவந்துள்ளது.

அதே சமயத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர் சர்ச்சைகள் எழுந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் "அதிமுக பாஜக கூட்டணி தொடரும்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அதிமுக எம்பி தம்பிதுரை உத்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சந்திப்புகள், அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்திலும், அதிமுக-பாஜக இடையாள கூட்டணி விவகாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

மேலும், கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவதற்கு 10 இடங்கள் ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அது குறித்தே தம்பிதுறையின் சந்திப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிமுகவுக்கு இரண்டு, மூன்று தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணி உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், அதிமுக தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே,  ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி, கர்நாடக மாநில சட்டமன்ற பொதுதேர்தலில் அதிமுக போட்டியிடம் என்றும், அதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் கர்நாடக மாநில புதிய நிர்வாகிகளையும் ஓ பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு அவர் அண்மையில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS OPS BJP JB Nadda Thambidurai meet Some info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->