#BigBreaking || அடுத்த அதிரடி..., சற்றுமுன் எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சற்று முன்பு வெளியாகியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை கொலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கீழ்க்கண்டவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர் மாறன்,
இலக்கிய அணி துணைச் செயலாளர் எம் முருகேசன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெயதேவி,
வலசை மஞ்சுளா பழனிசாமி, சுரேஷ் பாபு, திருநாவுக்கரசு, ஜவகர் (வெல்லமண்டி நடராஜன் மகன்),
மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் சரவணன், பசுவை சதீஷ், செந்தில், பாண்டியன், பாலமுருகன், 
ஹரி கிருஷ்ணன், சிவக்குமார், சுகுமாரன், பரத், சதீஷ், சதீஷ் ராஜ், நாஞ்சில் கே எஸ் கோலப்பன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS SIDE ANNOUNCE JULY 15


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->