ஓபிஎஸ், இபிஎஸ் எப்போது வேட்புமனு தாக்கல்? எதிர்த்து நிற்க போவது யார்? வெளியான பரபரப்பு தகவல்.!  - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு நாளை ஓபிஎஸ், இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்புமனு தாக்கல், நாளை மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. 

வேட்புமனு மனுக்கள் 5ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும், 6 ஆம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்பப் பெறலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

ஒரு பதவிக்கு ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், 8-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்த தேர்தலின் அதிகாரிகளாக அதிமுக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நாளை சனிக்கிழமை (4.12.2021) அமாவாசை நல்ல நாள் என்பதால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நாளை வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், எதிர்த்து போட்டி இருக்காது என்பதால் ஒருமனதாக இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK HEAD ELECTION OPS EPS Tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->