ஜெயிலர் பட டிக்கெட் இலவசம்.!! அதிமுக மாநாட்டிற்கு நூதன முறையில் அழைப்பு! - Seithipunal
Seithipunal


மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் அரசியல் ரீதியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு குழுக்கள் அமைத்து மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். சுமார் 10 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்டுகளை வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டிற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தை பொதுமக்களும் ரஜினி ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சத்யபாமா திரையரங்கில் காலைக்காட்சி முழுவதும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்பதிவு செய்து பொது மக்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இலவசமாக வழங்கி இதன் மூலம் ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் அதிமுக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK invite convention by giving Jailer movie free tickets


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->