தூங்கி கொண்டிருக்கும் அதிமுக ஐடி விங்க்! தட்டி எழுப்ப முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில, மண்டல, மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள்; மண்டல நிர்வாகிகள்; மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 1.10.2024 - செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், கழக தகவல் தெழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும்; வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. 

ஆகவே, கழக தகவல் தெழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்குப்பின் அதிமுக ஐடி விங்க் சரியாக செயல்படவில்லை என்று ஆட்சி தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமி விடுக்கும் அறிக்கையை கூட சமூகவலைத்தளங்களில் சுமார் 6 மணிநேரம் கழித்து தான் பதிவிடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், முக்கியமான விவகாரங்களில் அதிமுகவின் அதிகாரபூர்வ பக்கம், ஐடி விங்க் பக்கம், முன்னாள் அமைச்சர்களின் பக்கங்கள் எந்த பதிவும் போடாமல் தூங்கி கொண்டிருப்பதாக அதிமுகவினரே கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK IT Wing Meet EPS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->