பரபரப்பு!அவர் எந்த இடத்திலும் பழனி என்று குறிப்பிடவில்லை! சூழ்ச்சியில் சிக்கிய மோகன் ஜி!
Palani panjamirtham controversy: director mohan arrested
ஆந்திர பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறையாற்றினார்.
அப்போது, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.
இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து ஜூன், ஜூலை மாதம் 4 டேங்கரில் வந்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டின் தரம் குறைந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து, லட்டுவின் தரம் குறைந்தது குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்தோம் என்று கூறினார்.தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி திருப்பதி லட்டு விவகாரத்தில் கடுமையான அவரது கண்டனத்தை பதிவு செய்திருந்த்தார்! அதனைதொடர்ந்து தனியார் யூப்டியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த இயக்குனர் மோகன் ஜி. திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் குரல்கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் மோகன் ஜி , ஒரு கோவில் பஞ்சாமிருதத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரை கலக்கப்பட்ட விஷயம் தெரிந்தது காவல்துறையும் அதிகாரிகளும் அதனை அழித்தனர் என்று தெரிவித்தார்.அதற்கு பேட்டி எடுத்த நபர் பழனி கோவில்தான என்று அவர்தான் பழனி கோவில் அது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில்,மோகன் ஜி பேசிய காணொளியை தவறாக சித்தரித்து மோகன் ஜி யை கைது செய்யப்பட வேண்டும் என்று பல இடதுசாரி இயக்கங்களை சேர்ந்தவர் சமூகவலைதளப்பாக்கத்தில் தெரிவித்துவந்தனர்.
இந்தநிலையில்,இன்று காலை திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் இயக்குனர் மோகனை போலீசார் எந்த தகவலும் தெரியப்படுத்தாமல் சம்மன் இல்லாமல் எந்த ஒரு சட்ட விதியையும் பயன்படுத்தாமல் அதிகாரத்தை பயன்படுத்தி அடாவடித்தனமாக மோகன் ஜியை காவல்துறை கைது செய்து திருச்சி அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக மோகன் ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலைலில், முகநூல் பக்கத்தில் கதிரவன் என்பவர் ,மோகன் ஜி பேசிய வீடியோவில் அவர் எந்த இடத்திலும் பழனி என்று குறிப்பிடவில்லை... ஒரு கோவில் பஞ்சமிருதம் என்றே சொல்கிறார்!அதே மாதிரி இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் சொல்ல முடியாது நான் செவி வழியாக கேள்வி பட்டேன் என்றே சொல்கிறார்.இதற்கு காவல்துறை கைது என்பது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. என்று ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
English Summary
Palani panjamirtham controversy: director mohan arrested