இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ஹரிணி அமரசூரியா!
Harini Amarasuriya sworn in as the new Prime Minister of Sri Lanka
இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா குமார திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர்.
இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்துஇலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே நேற்று பதவியேற்றுக் கொண்டார். . கொழும்புவில் உள்ள அதிபா் செயலகத்தில் அனுரா குமார திசநாயகேக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மேலும், இலங்கை பிரதமராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் தினேஷ் குணவர்த்தனே இருந்து வந்த நிலையில், அங்கு புதிய அரசு அமைய உள்ளதையடுத்து தினேஷ் குணவர்த்தனே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
இந்நிலையில், இலங்கையின் இடைக்கால பிரதமராக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியா புதிய அதிபர் திசநாயகே முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் துறை மந்திரியாகவும் ஹரிணி பதவியேற்றார். இதன்மூலம் இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி பெற்றுள்ளார்.
English Summary
Harini Amarasuriya sworn in as the new Prime Minister of Sri Lanka