17 வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம்., No1 முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய பிரபலம்.!
AIADMK IT wing zonal secretary Kovai Sathyan
கொரோனா தடுப்பூசி முதல் தவணை இரண்டாம் தவணை செலுத்திய 23 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 17 இடம் பிடித்துள்ளது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுகவின் சென்னை தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரின் டிவிட்டர் பதிவில், "கொரோனா தடுப்பூசி முதல் தவணை இரண்டாம் தவணை செலுத்திய 23 மாநிலங்கள் பட்டியல் ஆங்கில ஊடகத்தில் வெளியாகி உள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திய தரவரிசையில் தமிழகம் 17 இடம்.
கொரோனா பாதித்தால் அது எந்த வகை என்று கண்டறியும் வசதி தமிழகத்தில் இல்லை. அவ்வாறு இருக்க டெல்டா வகை கொரோனா முற்றிலும் ஓழிக்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
உயிர் காக்கும் பணியில் கட்டமைப்பு வசதி செய்த அம்மா மினி கிளினிக் இந்த விடியா அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி விட்டது.
இப்படி மக்களை காக்கும் பணியில் திணறி வரும் இந்த அரசும் அதன் தலைமையும் கொஞ்சம் கூட மக்களைகாக்க வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கண்மூடித்தனமாக தளர்த்துவதன் காரணம் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பண பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களின் துயரில் எப்படியாவது பதிவிகளை பெற வேண்டும் என்பது தெளிவாகிறது.
மேலும், மேடை தோறும் இந்தியாவின் No 1 முதல்வர் என்று தனக்குத்தானே சூட்டிய பட்டத்தை வைத்து "நான் No 1 என்பது முக்கியமல்ல தமிழகம் No 1 என்பதுதான் முக்கியம்" என்று இன்னும் எத்தனை நாட்களுக்கு போலி விளம்பர அரசியலை முன்னிறுத்தி தமிழகத்தை மேலும் மேலும் படுகுழியில் தள்ளப்போகிறார்களோ. தமிழகம் எனும் பூமாலை தவறான கைகளில் இன்று." என்று கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK IT wing zonal secretary Kovai Sathyan