ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளில், மொத்தமாக 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 70 வாக்குச்சாவடிகள் முழுமையாக பெண்களால் நடத்தப்படும் என்ற சிறப்பம்சமும் உள்ளது. சராசரியாக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1,191 வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 70 தொகுதிகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

இதேபோல் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான தேதியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் தேர்தல் நடைபெறும் அதே பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: 10.01.2025  
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: 17.01.2025  
வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை: 18.01.2025  
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: 20.01.2025  
தேர்தல் நாள்: 05.02.2025  
வாக்கு எண்ணிக்கை: 08.02.2025  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode east By poll date announce 2025


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->