2026 நாம தான்! அடிச்சுக்க முடியாது... எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "இந்திய அளவில் முதலில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கிய கட்சி அதிமுக. அதிமுகவுக்கு எதிரான பொய் செய்திகளை தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும், அந்த வலிமை உங்களுக்கு உள்ளது. 

கடைசி கட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அதிமுக செய்த சாதனைகள் சென்று சேர வேண்டும். யூடியூப் சேனல்கள் மூலம் அதிமுக செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 10 சதவிகித வாக்குகளை இழந்து உள்ளோம். அதனை மீட்டு எடுக்க வேண்டும். 

எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு செல்கிறீர்களோ, அந்த அளவுக்கு கட்சிக்கு பலம். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வாயிலாக அதிமுக தொடர்பான பதிவுகளை பதிவிட வேண்டும்.

உள்ளூர் மக்கள் சார்ந்த பிரச்னைகளை காணொலிகளாக பதிவிட வேண்டும். சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவுகள் கண்ணியத்தோடு இருக்க வேண்டும். தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

நம்முடைய இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உங்களது பங்கு மிக முக்கியம். மாவட்டச் செயலாளர்கள் உடைய பணிகளை காணொலிகளாக பதிவிடுவது தகவல் தொழில்நுட்ப அணியின் பணி கிடையாது” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK ITWing meet 2026 Elections Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->