நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் - முதலவர் ஸ்டாலின் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், ரஜினிகாந்த் கூலி என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. செரிமானம் பிரச்சனை மற்றும் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin tweet about pray rajinikant health


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->