திமுகவின் அழிவு ஆரம்பம்! அந்த முதல் கமெண்ட்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசை விமர்சித்து கமெண்ட் செய்த காவலரை பணியிடை நீக்கம் செய்து இருப்பது, ஆணவப் போக்கு என்றும், இதுதான்  திமுகவின் அழிவின் ஆரம்பம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திமுகவை அனுசரித்தால் 'Promotion'! எதிர்த்தால் 'Suspension'-ஆ?

வேலூரில் மதிவாணன் என்ற காவலர், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முகநூலில் அமைச்சருடன் ஞானசேகரன் இருக்கும் ஒரு பதிவிற்கு கீழ் கமெண்டில் "மானங்கெட்ட திமுக அரசு" என பதிவிட்டுள்ளார்.

அதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

எங்கள் ஆட்சியை விமர்சித்தால் இது தான் பதில் என எச்சரிக்கிறதா திமுக அரசு?

கடின உழைப்பால் காக்கி சட்டை அணிந்த அந்த காவலரின் நேர்மையையும்-கருத்து சுதந்திரத்தையும் பிடுங்கியுள்ளார் திறனற்ற திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்!

இந்த ஆணவப் போக்கு தான் திமுகவின் அழிவின் ஆரம்பம்!

காவலரின் நீக்கம் கடுமையான கண்டனத்திற்குரியது" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar Condemn to MDK Govt PC Suspand order issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->