பூனையின் உருட்டலுக்கு புலி பயப்படாது.!! பரபரப்பை அதிமுகவினரின் கிளப்பிய போஸ்டர்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தனியார் செய்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் அதற்கான பலனை சந்திக்க நேரிடும் என பகிரங்கமாக மிரட்டல் விடும் வகையில் பேசி இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் அதற்கு தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ராம சீனிவாசன் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் ராம சீனிவாசனை கண்டித்து அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பு கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் "பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசனை கடுமையாக எச்சரிக்கிறேன். பாஜக என்னும் பூனையின் உருட்டலுக்கு எலி வேண்டும் என்றால் பயப்படலாம் அஇஅதிமுக என்னும் புலி பயப்படாது" மணிமாறன் என்பவர் ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk poster against BJP Rama sreevasan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->