ஆட்டுக்குட்டி மாட்டிக்கிச்சு.. பழமும் அழுகிவிடும்..!! - போட்டு தாக்கிய செல்லூர் ராஜூ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தேர்தல் களம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது ‌"தமிழ்நாட்டில் ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம் சிறுத்தை நடுவில் மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியாக என்ன பேசுவது என்று தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். 

கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி இருந்த மோடி காமராஜர் ஆட்சியையோ, புரட்சித்தலைவர் ஆட்சியையோ ஏன் கொடுக்கவில்லை? இதுவரை கொடுக்கவில்லை இதன் பிறகு கொடுப்பார்களா? ஆட்சியில் இருக்கும் போதே செய்யாதவர்கள் இதன் பிறகு ஆட்சிக்கு வந்து செய்வதாக மக்களை ஏமாற்றுகின்றனர். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் அண்ணா உருவாக்கிய கட்சியை களேபரம் செய்து விட்டது. தீய சக்தி திமுக ஒழிக்கும் வரை அதிமுக ஓயாது என முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கூறியது போல தற்போது எடப்பாடியாரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இங்கு எங்களிடம் எப்படி இருந்த மனுஷன் இப்போ பலாப்பழம் தூக்கிட்டு அவர் நிற்கிற காட்சியை பாருங்க.. அந்தப் பழம் பழுப்புன்னு சொல்றாங்க.. ஆனா அழுகி தான் போகும்.. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தன்னுடைய மானம், ரோஷம் எல்லாத்தையும் விட்டு விட்டு புரட்சித்தலைவரையும் புரட்சித்தலைவையும கொச்சையாக பேசிய அண்ணாமலையுடன் நின்று கொண்டு வாக்கு சேகரிக்கிறார் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK sellur Raju criticized BJP annamalai Ops


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->