கும்பி எரியுது; குடல் கருகுது; இது ஒரு கேடா? - ஸ்டாலினை ரவுண்டு கட்டிய செல்லூர் ராஜூ.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜுவிடும் செய்தியாளர்கள் முதலமைச்சர் கொடைக்கானல் சுற்றுலா சென்று போது கோல்ப் விளையாடியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு "அவர் நல்ல கூலாக இருந்துட்டு வரட்டும். குடும்பத்தோட தனியா போய் இருக்காரு. அதைப்பற்றி எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. 

இதே நேரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொரநாடு சென்ற போது அப்போது இருந்த திமுக தலைவர் கருணாநிதி இங்கு கும்பி ஏரியது; குடல் கருகுது கொடைக்கானல் ஒரு கேடா என விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுபோல நாங்க மோசமா சொல்ல மாட்டோம். 

முதலமைச்சராக இருந்தாலும் அவருக்கென குடும்பம் இருப்பதால் குடும்பத் தலைவன் என்ற முறையில் செல்கிறார். இதை நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர்கள் செய்தார்களா என்பதை பார்க்க வேண்டும். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு சென்றபோது கேலி கிண்டல் செய்தவர்கள் தான் திமுகவினர். இதே நேரத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்திருந்தால் வெப்பத்தால் மக்கள் வாடிக் கொண்டிருக்கும்போது கொடைக்கானல் தேவையா என விமர்சனம் செய்திருப்பார்கள்"என முதலமைச்சர் கொடைக்கானல் சென்றதை விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK sellur Raju criticized mkStalin Kodaikanal trip


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->