அவர் என்ன ஜோசியரா? ஏற்கனவே கிழி கிழினு கிழிச்சுட்டேன்.. வெளுத்து வாங்கியே செல்லூர் ராஜூ.!! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலுக்குப் பின் அதிமுக இருக்காது என விமர்சனம் செய்தார். 

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் செயல்படும் எனவும் பகிரங்கமாக கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  "தேர்தலுக்குப் பின் அதிமுக இருக்காது என்று கூற அண்ணாமலை என்ன ஜோசியரா? அல்லது சூப்பர் ஸ்டாரா? அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது, தோல்வி பயத்தால் அவர் இப்படி பேசுகிறார். காமெடியனாக அண்ணாமலை மாறிவிட்டார். அண்ணாமலை ஏற்கனவே கிழி கிழி என்று கிடைத்துவிட்டேன். 

அவரைப் பற்றி பேச எதுவும் இல்லை. சென்னையில் அதிக கூட்டம் கூடும் பாண்டி பஜாரிலேயே பாஜக ரோட்சவுக்கு ஆள் யாரும் வரவில்லை. டீக்கடையில் நின்றிருந்தவர்கள் கூட பாஜக பேரணியில் பிரதமரை நோக்கி கைசைக்கவில்லை.

ரோடு ஷோஎன்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியை சென்னைக்கு வரவழைத்து செல்வாக்கை குறைத்தவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK sellur Raju reply to Annamalai criticism


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->