மம்தா பானர்ஜியை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் காங்கிரஸுக்கு ஆதரவு.!
Akhilesh yadav support mamtha Bannerjee decision
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முடிவுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. இதில் காங்கிரசும், பாஜகவும் ஒரே கொள்கை கொண்ட கட்சி தான் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சரும் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுக்கு பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள இடங்களில் மட்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். அதேபோல் மாநில கட்சிகள் பலமாக உடல் இடங்களில் காங்கிரஸும் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முடிவுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மாநிலத்தில் பலமாக இருக்கும் கட்சி அந்த மாநிலத்தில் போட்டியிட வேண்டும். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பிற கட்சிகளும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Akhilesh yadav support mamtha Bannerjee decision