இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் மோசடிக்காரர்கள் - அமித்ஷா குற்றசாட்டு!! - Seithipunal
Seithipunal


மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் அமித்ஷா  பேசுகையில், ராகுல் காந்தி பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். பிரதமர் மோடியும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் இடஒதிக்கீட்டை ஒழித்துவிடுவார் விடுவார் என்று காங்கிரஸ் கட்சி பொய் கூறி வருகிறது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி சட்டப்பிரிவு 370ரத்து, முத்தலாக் ஒழிப்பு, பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை போன்ற விவகாரங்களில் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி உள்ளார். இண்டியா கூட்டணி பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைவருமே மோசடிக்காரர்கள். ஆனால் பிரதமர் மோடி மீது எந்த ஒரு ஊழல் வழக்கும் கிடையாது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All India alliance members are frauds Amit Shah accuses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->