அதிமுக - தவெக இடையே கூட்டணி?...தவெக மாநாடு வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


தவெக மாநில மாநாடு வெற்றி பெற தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் இன்று அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.  

மேலும், தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ள சூழ்நிலையில், ஓவ்வொரு கட்சிக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை இருக்கலாம், ஆனால் மக்கள் தான் முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர் என்றும், திரையுலகில் விஜய் முன்னணி நடிகராக விளங்கி வரும் நிலையில், அவருக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் அவரும் பொது சேவை செய்யவேண்டுமென்று விரும்பி கட்சி தொடங்கியுள்ளார். தவெக மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alliance between aiadmk and tvk congratulations to edappadi palaniswami for the success of the tvk conference


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->