கவரப்பேட்டை ரயில் விபத்து!...கொடி அசைப்பவர், மேலாளர் என 4 பேரிடம் அதிரடி விசாரணை! - Seithipunal
Seithipunal


நடப்பு மாதம் 11-ம் தேதி பாக்மதி விரைவு ரெயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு  சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது.  

இந்த விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில்,  சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.  இந்த விபத்தில்  19 பேர் படுகாயம் அடைந்தனர். முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து,  சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அதில், தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கவரப்பேட்டை நிலைய மேலாளர், கொடி அசைப்பவர், கேட் கீப்பர், நிலைய கண்காணிப்பாளர் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இது தொடர்பாக மெக்கானிக்கல், சிவில், ஒர்க்ஸ், சிக்னல், போக்குவரத்து இயக்கம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kavarappettai train accident flag waver manager and 4 people are being investigated


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->