ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : இன்று ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடர் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஜாம்ஷெட்பூரில் நேற்று நடைபெற்ற இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்த தொடரில் இன்று ஒடிசாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையேயான ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தொடரில் இதுவரை ஒடிசா அணி 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. மேலும், ஈஸ்ட் பெங்கால் 5 ஆட்டங்களில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் 13வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isl football series odisha east bengal clash today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->