அமர் பிரசாத் ரெட்டியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் பாஜகவினர் 50 அடி உயரத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைத்தனர். அதனை அகற்ற காவல்துறையினர் சென்றபோது பாஜக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் கொடி கம்பம் அகற்ற கொண்டுவரப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை பாஜகவினர் அடித்து நொறுக்கினர்.

இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பாஜக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்த நிலையில் அவர்களுக்கு (அக்.31) இன்று வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதன்படி இன்று பாஜக நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நிறைவடைவதால் அவர்கள் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

ஏற்கனவே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய ஆலந்தூர் நீதிமன்றம் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 6 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 3ம் தேதி வரை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amar Prasad Reddy court custody extended again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->